Published : 08 Jan 2025 09:26 AM Last Updated : 08 Jan 2025 09:26 AM
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
சென்னை: இந்தியாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ஒன்பிளஸ் 13ஆர் போனும் வெளிவந்துள்ளது.
சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.
குவால்கம் ப்ராஸசரில் ஒன்பிளஸ் 13 சீரிஸ் இயங்குகிறது. இந்தியாவில் குளிர்கால அறிமுகமாக வெளிவந்துள்ளது ப்ரீமியம் மாடல் சீரிஸ் போன் இது. 4 ஆண்டுகளுக்கு இயங்குதள அப்டேட் மற்றும் 6 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும் என ஒன்பிளஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இதில் ஏஐ அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
சிறப்பு அம்சங்கள்
6.82 இன்ச் எல்டிபிஓ QHD+ டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் சோனி எல்ஒய்டி 808 சென்சாரை கொண்டுள்ளது பிரதான கேமரா
32 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
6,000mAh பேட்டரி
100 வாட்ஸ் சார்ஜர் இந்த போனுடன் கிடைக்கிறது
50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டை இந்த போன் கொண்டுள்ளது
WRITE A COMMENT
Be the first person to comment