Published : 10 Dec 2024 11:26 AM
Last Updated : 10 Dec 2024 11:26 AM

டெக்ஸ்டுகளை வீடியோவாக மாற்றும் Sora ஏஐ வீடியோ ஜெனரேட்டர்!

Sora மாடல் ஜெனரேட் செய்த வீடியோவின் ஸ்க்ரீன்ஷாட்

கலிபோர்னியா: டெக்ஸ்டுகளை வீடியோவாக மாற்றும் Sora ஏஐ வீடியோ ஜெனரேட்டரை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். அது குறித்து பார்ப்போம்.

மாயாஜால கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் வரும் காட்சி போல ஏஐ தொழில்நுட்பம் மாயை நிகழ்த்தி வருகிறது. கதை, கட்டுரை, கவிதை, படம் போன்றவை மட்டுமல்லாது பயனர்கள் உள்ளிடும் டெக்ஸ்டுகளுக்கு (ப்ராம்ப்ட்) ஏற்ப வீடியோவையும் ஜெனரேட் செய்து வருகிறது.

அப்படி வீடியோவை ஜெனரேட் செய்து தரும் Sora ஏஐ மாடலை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். கடந்த பிப்ரவரி மாதம் இதனை சோதனை முயற்சியாக ஓபன் ஏஐ வெளியிட்டது. குறிப்பிட்ட பயனர்கள் மட்டுமே அதனை பயன்படுத்தும் சூழல் இருந்தது. இந்நிலையில், தற்போது சாட்ஜிபிடி புரோ மற்றும் பிளஸ் சந்தா செலுத்தும் பயனர்கள் Sora ஏஐ மாடலை பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்க முடியும்.

1080 பிக்சல் ரெஸலுஷனில் 20 நொடிகள் கொண்ட வீடியோவை பயனர்கள் இதன் மூலம் உருவாக்க முடியும். ஒய்டு ஸ்க்ரீன், வெர்ட்டிக்கல், ஸ்கொயர் உள்ளிட்ட பார்மெட்களில் வீடியோக்களை உருவாக்கலாம். மாதத்துக்கு 50 வீடியோக்கள் வரை பயனர்கள் இதில் உருவாக்க முடியும். ஒவ்வொரு ஃப்ரேமாக பயனர்கள் தங்களது வீடியோக்களை உருவாக்க முடியும் என தகவல்.

இப்போதைக்கு ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் இதனை பயனர்கள் பயன்படுத்த முடியும். அதே நேரத்தில் டீப்ஃபேக் (deepfake) உள்ளிட்ட விவகாரங்களிலும் ஓபன் ஏஐ இந்த வீடியோ ஜெனரேட் அம்சத்தில் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x