Published : 21 Nov 2024 04:28 PM
Last Updated : 21 Nov 2024 04:28 PM
கடந்த பத்து ஆண்டுகளில் எலக்ட்ரானிக் பொருள்கள் அசுர வளர்ச்சியடைந்துள்ளன. குறிப்பாக, தொலைக்காட்சியின் காட்சித் தன்மையும் வடிவமைப்பும் அதன் பயனாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப மாறுதலை எதிர்கொண்டு வருகின்றன.
பாட்காஸ்டை நோக்கி... கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்தே கேபிள் இணைப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. மக்கள் பாட் காஸ்ட்டை நோக்கிப் பயணிக்க ஆரம் பித்துவிட்டனர். 2023 புள்ளி விவரப்படி 57% வீடுகளில் கேபிள் இணைப்பு உள்ளது. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் குறையக்கூடும்.
ஸ்ட்ரீமிங்: யூடியூப், பாட்காஸ்ட், இன்ஸ்டா போன்ற தளங்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பும் நிகழ்ச்சிகளுக்குப் போட்டியாகப் பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கி வந்து விட்டன. அதை உணர்ந்து பார்வையாளர்களுக்குச் சுவாரசியத்தைத் தரக்கூடிய நெருக்கடியான காலக்கட்டத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளன. ஆகையால், டிரெண்டிங்குக்கு ஏற்றபடி ஸ்ட்ரீமிங் நிகழ்ச்சிகளைக் கூடுதலாக வழங்கும் சூழலுக்குத் தொலைக்காட்சி அலை வரிசைகள் தள்ளப்பட்டுள்ளன.
நேரலை, பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் இணையம் வழியாகக் கணினி, அலைபேசி சாதனங்களுக்கு வழங்கப்பட்டு, ஒளிபரப்பாகும். பாட்காஸ்ட்கள், வெப்காஸ்ட்கள், திரைப் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவை ஸ்ட்ரீமிங் உள்ளடக்கத்தில் வருபவை.
ரோபாட் & லேசர் தொலைக்காட்சி: ஒரே இடத்தில் வைத்துப் பார்க்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு மாற்றாக, ரோபோ டிவிகள் ஆங்காங்கே பயன்பாட்டுக்கு வரத் தொடங்கி விட்டன. இவற்றை நாம் எங்கு வேண்டுமானலும் எடுத்துச் செல்லும் வகையில் மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அடுத்து மிகப் பெரிய பிரம்மாண்ட திரையுடன், துல்லியமான ஒளி அனுபவத்துடன் வெளி வந்துள்ளன லேசர் தொலைக்காட்சிப் பெட்டிகள். இவை எல்லாம் எதிர்காலத்தில் தொலைக் காட்சிக்கான இருப்பை நிலைத்திருக்க வைக்கும். - இந்து
| இன்று - நவ.21 - உலக தொலைக்காட்சி தினம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT