Published : 13 Nov 2024 01:14 PM
Last Updated : 13 Nov 2024 01:14 PM
புதுடெல்லி: உலக அளவில் பல்வேறு துறைகளில் ஏஐ மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், டெவலப்பர்களுக்கு கோடிங் முக்கியத் திறன் என்றும், அதனால் அதை டெவலப்பர்கள் கற்பது அவசியம் என கூகுள் நிறுவனத்தின் ஆராய்ச்சி துறைத் தலைவரான யோஸி மேஷாஸ் (Yossi Matias) தெரிவித்துள்ளார்.
“புதிய தொழில்நுட்பங்கள் மென்பொருள் துறை சார்ந்தவர்கள் மேற்கொண்டு வரும் வழக்கமான பணிகளில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கோடிங் பணிகளில் ஏஐ டூல்கள் உதவுகின்றன. ஆனால், கோடிங் திறனின் அடிப்படைக்கான மதிப்பு என்பது மாறாமல் உள்ளது. அதனால் அதனை கற்பது அவசியம்.
டெவலப்பர்களுக்கு கோடிங் பணி சார்ந்து ஏஐ உதவுகிறது. அது ஆரம்ப நிலையில் உள்ளது. குறிப்பாக ஜூனியர் அளவில். அது முழு கோடிங் ப்ராசஸையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு பணி சார்ந்த அனுபவத்தை பெறுவதில் சவால் எழுந்துள்ளது. ஒருவகையில் இப்போதைக்கு இது இந்த டெக் தொழில் துறையில் உள்ள ட்ரெண்ட்” என அவர் தெரிவித்துள்ளார். இதனை தனியார் ஊடக நிறுவன பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
கோடிங் பணியில் ஏஐ அஸிஸ்டன்ஸ் என்பது தற்போது அதிகரித்துள்ளது. வெகு சில நாட்களில் இந்த பணியை முழுவதும் ஏஐ வசம் ஆகும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் யோஸி மேஷாஸ் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT