Published : 22 Jun 2018 11:24 AM
Last Updated : 22 Jun 2018 11:24 AM
ஃபயர்பாக்ஸ் பிரவுசரில் சைடுபார் எனும் வசதி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதேபோல இப்போது சைடுவியூ எனும் வசதியை ஃபயர்பாக்ஸ் முன்னோட்ட அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி மூலம் ஒரே நேரத்தில் இரண்டு இணையதளங்களை அருகருகே பார்க்கலாம். அதாவது யூடியூப் வீடியோ பார்த்தபடி ஷாப்பிங் செய்யலாம் அல்லது ட்விட்டர் பதிவுகளைப் பார்த்தபடி வேறு ஒரு தளத்தைப் பார்க்கலாம். ஃபயர்பாக்ஸ் சோதனை வசதிகளின் கீழ் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதைத் தனியே தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
இணைய முகவரி: https://bit.ly/2JrgeC4
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT