Published : 10 Sep 2024 11:54 PM
Last Updated : 10 Sep 2024 11:54 PM

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 - தூக்கமின்மை முதல் இதய நோய் வரை கண்டறியும் வசதி

குபெர்டினோ: ஆப்பிள் நிறுவனம் திங்கட்கிழமை அன்று ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10-னை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்வாட்ச் தூக்கமின்மை முதல் இருதய நோய் வரையிலான சில நோய்களை கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பயனர்கள் தங்களுக்கு வரும் மெசேஜ்கள், முக்கிய நோட்டிபிகேஷன்கள், தொலைபேசி அழைப்புகள் போன்றவற்றை அறிந்து கொள்ள உதவுகிறது ஸ்மார்ட்வாட்ச். அதோடு இதய துடிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் ஆரோக்கிய நலன் சார்ந்த தகவல்களையும் இந்த ஸ்மார்ட்வாட்ச்கள் வழங்கி வருகின்றன.

அதிலும் சமத்தான ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் பணி கொஞ்சம் ஓவர் டைமாக உள்ளது. இதற்கு முன்னர் ஆப்பிள் வாட்ச்களை அணிந்திருந்த பயனர்களை அவசர நேரத்தில் தக்க சமயத்தில் ஆப்பிள் வாட்ச் காத்த தகவல் குறித்து நாம் அறிந்திருப்போம். இந்த சூழலில் தொழில்நுட்பத்தின் அடுத்த பாய்ச்சலாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10: சிறப்பு அம்சங்கள்

  • வழக்கமான ஆப்பிள் வாட்ச்களை காட்டிலும் இதில் பெரிய ஓஎல்இடி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது
  • வாட்ச்ஓஎஸ் 11 இயங்குதளம்
  • எஸ்10 எஸ்ஐபி
  • 18 மணி நேர பேட்டரி லைஃப்
  • தூக்கமின்மையை கண்டறியும் வகையில் Sleep Apnea என்ற அம்சத்தை இதில் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. இந்த கண்டீஷனை கண்டறிய ஆக்சிலோமீட்டர் சென்சாரை பயன்படுத்துகிறது
  • பயனர்களை காக்கும் வகையில் கிராஷ் மற்றும் Fall டிடெக்‌ஷன் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது. இது பயனர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படும் நேரங்களில் தானியங்கு முறையில் இயங்கும்
  • பயனர்களின் ஆரோக்கியத்துக்கு தீங்களிக்கும் சுற்றுப்புற சூழலை கண்டறிந்து அலர்ட் செய்யும்
  • சீரற்ற இதயத் துடிப்பை கண்டறியவும் இந்த வாட்ச் உதவும்
  • இதோடு ஃபிட்னஸ் சார்ந்து பல்வேறு ஆக்டிவிட்டீஸ்களை டிராக் செய்யும்
  • இதன் விலை ரூ.46,900. வரும் 20-ம் தேதி முதல் இதனை பயனர்கள் பெறலாம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x