Published : 10 Sep 2024 01:05 AM Last Updated : 10 Sep 2024 01:05 AM
ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் போன்கள் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
குபெர்டினோ: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள குபெர்டினோ நகரில் ஆப்பிள் நிறுவனத்தின் ‘It’s Glowtime’ நிகழ்வில் ஐபோன் 16 சீரிஸ் போன்களை அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் அறிமுகம் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமாகி உள்ள இந்த போன்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. அது முதல் ஆண்டுதோறும் தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புது புது மாடல் ஐபோன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஐபோன் 16 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் கணிசமான பங்கை ஐபோன் தனக்கென கொண்டுள்ளது. இந்த முறை ஏஐ அம்சங்கள், கேமரா கன்ட்ரோல் பட்டன் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ் சிறப்பு அம்சங்கள்
6.1 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 16
6.7 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 16 பிளஸ்
ஏ18 ப்ராசஸர் இதில் இடம்பெற்றுள்ளது
ஐஓஎஸ் 18 இயங்குதளம்
48 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
12 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா வொய்ட் கேமராவும் பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
12 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
டைப்-சி சார்ஜிங் போர்ட்
ஐந்து வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
ஐபோன் 16 (128ஜிபி) ரூ.79,900
ஐபோன் 16 பிளஸ் (128ஜிபி) ரூ.89,900
பயனர்கள் சில டாஸ்குகளை எளிதில் மேற்கொள்ளும் வகையில் ஆக்ஷன் பட்டன் இதில் இடம்பெற்றுள்ளது
அதேபோல கேமரா கன்ட்ரோல் பட்டனும் இதில் இடம்பெற்றுள்ளது
ஐபோன் 16 புரோ, ஐபோன் 16 புரோ மேக்ஸ் சிறப்பு அம்சங்கள்
ஏ18 புரோ சிப்
6.3 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 16 புரோ
6.9 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 16 புரோ மேக்ஸ்
48 மெகாபிக்சல் பிரதான கேமரா,
48 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா வொய்ட் கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
12 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
கேமரா கன்ட்ரோல் பட்டன் புரோ மாடல் போன்களிலும் இடம்பெற்றுள்ளது
ஐபோன் 16 புரோ போனின் ஆரம்ப விலை ரூ.1,19,900
ஐபோன் 16 புரோ மேக்ஸ் போனின் ஆரம்ப விலை ரூ.1,44,900
வரும் 13-ம் தேதி முதல் புதிய ஐபோன் 16 வரிசை போன்களை முன்பதிவு செய்யலாம். 20-ம் தேதி முதல் பயனர்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
WRITE A COMMENT