Published : 12 Jul 2024 02:37 PM
Last Updated : 12 Jul 2024 02:37 PM

இந்தியாவில் ஒப்போ Reno 12 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

ஒப்போ ரெனோ 12 புரோ

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 12 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் ரெனோ 12 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ‘ரெனோ’ சீரிஸ் வரிசையில் வெளிவந்துள்ள போன். இதோடு சேர்த்து ரெனோ 12 என்ற போனும் வெளிவந்துள்ளது.

ரெனோ 12 புரோ - சிறப்பு அம்சங்கள்

  • 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • மூன்று ஆண்டுகளுக்கு இயங்குதள அப்டேட் கிடைக்கும் என ஒப்போ உறுதி செய்துள்ளது
  • மீடியாடெக் டிமான்சிட்டி 7300 ப்ராசஸர்
  • 12ஜிபி ரேம்
  • 256ஜிபி ஸ்டோரேஜ்
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் உடன் Sony LYT-600 சென்சார் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • முன்பக்கமும் 50 மெகாபிக்சல் கொண்ட கேமரா உள்ளது
  • 5,000mAh பேட்டரி
  • 80W அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
  • டைப் - சி போர்ட்
  • 5ஜி நெட்வொர்க்
  • இன்பில்ட் ஏஐ அம்சங்களும் இதில உள்ளது
  • இந்த போனின் விலை ரூ.36,999 முதல் தொடங்குகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x