Published : 11 Jul 2024 01:20 PM
Last Updated : 11 Jul 2024 01:20 PM

சாம்சங் கேலக்சி Z Fold 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

கேலக்சி Z ஃபோல்ட் 6 போன்

சென்னை: சாம்சங் நிறுவனம் கேலக்சி ‘Z Fold 6’ போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதனுடன் Z Flip 6 போனும் வெளிவந்துள்ளது.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப் புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி Z ஃபோல்ட் 6 போன் வெளிவந்துள்ளது. பயனர்களுக்கு சிறந்த பயன்பாட்டு அனுபவத்தை வழங்கும் நோக்கில் ஏஐ அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 7.6 இன்ச் மெயின் டிஸ்பிளே
  • 6.3 இன்ச் வெளிப்புற டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • ஏழு ஆண்டுகளுக்கு இயங்குதள அப்டேட் வழங்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது
  • ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 3 சிப்செட்
  • 12ஜிபி ரேம்
  • 256ஜிபி/512ஜிபி/1டிபி ஸ்டோரேஜ்
  • முன்பக்கம் 10 மெகாபிக்சல் கொண்ட கேமரா உள்ளது. போனின் பிரதான டிஸ்பிளேவில் 4 மெகாபிக்சல் கேமரா உள்ளது
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம் பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 4,400mAh பேட்டரி
  • டைப்-சி யுஎஸ்பி
  • 5ஜி நெட்வொர்க்
  • வேப்பர் சேம்பர்
  • இதோடு ஏஐ சார்ந்த பல்வேறு அம்சங்கள் இதில் கிடைக்கிறது
  • மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • இந்த போனின் விலை ரூ.1,64,999 முதல் தொடங்குகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x