Published : 01 Jul 2024 03:22 PM
Last Updated : 01 Jul 2024 03:22 PM

பட்ஜெட் விலையில் ரியல்மி சி63 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் ரியல்மி சி63 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது ரியல்மி நிறுவனம் ‘சி’ வரிசை போன்களில் சி63 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சிறப்பு அம்சங்கள்:

  • 6.7 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே
  • யுனிசாக் டி612 சிப்செட்
  • 4ஜிபி ரேம்
  • 128ஜிபி ஸ்டோரேஜ்
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ள கேமரா
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • 5,000mAh பேட்டரி
  • 45 வாட்ஸ் சார்ஜர் இந்த போனுடன் வருகிறது
  • டைப்-சி யுஎஸ்பி போர்ட்
  • ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச்
  • மினி கேப்ஸ்யூல் 2.0
  • இரண்டு வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த போனின் விலை ரூ.8,999
  • வரும் 3-ம் தேதி முதல் சந்தையில் விற்பனைக்கு வருகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x