Published : 26 Jun 2024 01:59 PM
Last Updated : 26 Jun 2024 01:59 PM

ஒன்பிளஸ் நார்ட் CE 4 Lite ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

ஒன்பிளஸ் நார்ட் CE 4 Lite 5ஜி ஸ்மார்ட்போன்

சென்னை: இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நார்ட் CE 4 Lite 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். கடந்த ஏப்ரலில் வெளியான ஒன்பிளஸ் நார்ட் CE 4 வரிசையில் இது வெளிவந்துள்ளது.

சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் ஒன்பிளஸ் நார்ட் CE 4 Lite 5ஜி அறிமுகமாகி உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 695 ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • 8ஜிபி ரேம்
  • 128ஜிபி / 256ஜிபி என இரண்டு ஸ்டோரேஜ் வேரியன்ட்
  • பின்பக்கத்தில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5ஜி நெட்வொர்க்
  • டைப்-சி யுஎஸ்பி போர்ட்
  • 5,500mAh பேட்டரி
  • இந்த போனுடன் 80 வாட்ஸ் சார்ஜரை வாடிக்கையாளர்கள் பெறலாம்
  • ரிவர்ஸ் சார்ஜிங் அம்சமும் இதில் உள்ளது
  • இந்த போன் மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ளது
  • இதன் விலை ரூ.19,999 முதல் தொடங்குகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x