Published : 20 Jun 2024 10:28 PM
Last Updated : 20 Jun 2024 10:28 PM

ரியல்மி GT 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

ரியல்மி GT 6 ஸ்மார்ட்போன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி GT 6 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இது அந்த நிறுவனத்தின் ஃப்ளேக்‌ஷிப் மாடலாக வெளிவந்துள்ளது. இந்த போனின் அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது.

ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. பிரீமியம் விலையிலான போன்களையும் விற்பனை செய்து வருகிறது. தற்போது ரியல்மி GT 6 மாடல் அறிமுகமாகி உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே
  • ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜெனரேஷன் 3 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது
  • அதில் 50 மெகாபிக்சல் சோனி LYT-808 லென்ஸ் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியன்ட்களில் வெளிவந்துள்ளது
  • 5,500mAh பேட்டரி
  • 120 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி
  • இந்த போனின் விலை ரூ.35,999 முதல் தொடங்குகிறது
  • வரும் ஜூன் 25-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வருகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x