Published : 19 Feb 2018 01:41 PM
Last Updated : 19 Feb 2018 01:41 PM

பொருள் புதுசு: குழந்தை ரோபோ

தரையில் தவழும் குழந்தைகளின் உடலுக்குள் செல்லும் தூசி, குப்பை, தோல் திசுக்கள், பாக்டீரியாக்கள் எந்த அளவுக்கு உள்ளன என்பதைக் கண்டறிவதற்காக தவழும் குழந்தை வடிவத்தில் ஒரு ரோபோவை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். அழுக்கு நிறைந்த கார்பெட்டில் குழந்தை போல் தவழ்ந்து சென்று இந்த ரோபோ தகவல்களை சேகரிக்கிறது. இந்தத் தகவல்களின் மூலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகளைக் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

கேமரா உதவி கருவி

டிஎஸ்எல்ஆர் கேமராவை புதிதாக பயன்படுத்துபவர்கள் அடிப்படைகளை கற்றுக்கொள்வதற்கும், தொழில்முறை கலைஞர்கள் வேகமாக புகைப்படம் எடுப்பதற்கும் உதவும் கருவி. அமெரிக்காவைச் சேர்ந்த அர்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

 

ஆவி பிடிப்பான்

அலர்ஜி மற்றும் சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் அடிக்கடி ஆவி பிடிப்பார்கள். அவர்களுக்கு ஏற்ற சிறிய கருவி.பேட்டரியில் இயங்கும் இந்த கருவியை எந்த இடத்திலும் பயன்படுத்தலாம். வெப்ப அளவை மாற்றும் வசதியும் உள்ளது. ஆரா மெடிக்கல் நிறுவனம் உருவாக்கியுள்ளது

 

முக அழகு கருவி

களிமண் ஃபேஷியல், பழ ஃபேஷியல், பேப்பர் ஷீட் ஃபேஷியலுக்கு மாற்றாக வந்திருக்கும் கையடக்க உபகரணம். 90 விநாடியில் ஃபேஷியல் செய்ய முடியும். கிரையோ தெரபி, தெர்மோ தெரபி போன்ற ஸ்பா சிகிச்சைகளை இதன் மூலம் வீட்டிலேயே செய்யமுடியும்.

 

மரக்கட்டிடம்

மரம் மற்றும் இரும்பை மட்டுமே ( 90%) பயன்படுத்தி ஒரு கட்டிடம் டோக்கியோவில் கட்டப்பட இருக்கிறது. 1140 அடியுள்ள இந்தக் கட்டிடம் தரையிலிருந்து 70 தளங்களைக் கொண்டதாக இருக்கும். கட்டி முடிக்கப்படும்போது ஜப்பானின் மிக உயரமான கட்டிடமாகவும் உலகின் மிக உயரமான மரக்கட்டிடமாகவும் இருக்கும். ஜப்பான் தலைநகரை சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை நகரமாக மாற்றுவதற்காக இந்த கட்டிடம் கட்டப்படவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x