Published : 22 Feb 2018 05:31 PM
Last Updated : 22 Feb 2018 05:31 PM

20 மெகாபிக்சல் முகப்பு கேமராவுடன் ரெட்மி நோட் 5 ப்ரோ: நாளெல்லாம் உழைக்கும் பேட்டரி

ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ப்ரோ மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கம் போல இணையத்தில் பகல் 12 மணிக்கு, முன்பதிவின் அடிப்படையில் விற்பனை தொடங்கியது. விரைவில் ஜியோமி கடைகளிலும் இந்த மொபைல் கிடைக்கும்.

ரெட்மி நோட் 5 மொபைலின் அடுத்த வடிவமாகவே நோட் 5 ப்ரோ வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.18,000க்குள் 6 ஜிபி ரேம் இருக்கும் ஒரு சில மொபைல்களில் 5 ப்ரோவும் ஒன்று. 4 ஜிபி ரேம் பதிப்பும் இதில் கிடைக்கிறது.

5.99 இன்ச் அகல எல்சிடி திரை மற்றும் 2160x1080 பிக்சல் அடர்த்தி கொண்டுள்ளது. திரையில் தோன்றும் எழுத்துகளை நன்றாகப் பெரிதாக்கிக் கொள்ளும் வசதியுள்ளதால், வயதானவர்களுக்கு ஏற்ற மொபைலாக இது இருக்கும். ஸ்னாப்ட்ரேகன் 636 ப்ளாட்ஃபார்மில், குவால்கம் 260 க்ரயோ ப்ராசஸருடன் வேகமான செயல்பாடைத் தருகிறது. 2 சிம்கள் பொருத்தும் வசதியும், 64 ஜிபி மெமரியும் இதில் உள்ளது. கூடுதல் மெமரி வேண்டுமென்றால் ஒரு சிம்முக்கு பதிலாக மெமரி கார்ட் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆண்ட்ராய்ட் ஓரியோவில் இயங்கும் இந்த மொபைலின் இரட்டை கேமராவில் ஒன்று 12 மெகாபிக்சல், மற்றொன்று 5 மெகாபிக்சல். முகப்பு (front) கேமரா சோனி சென்சாருடன் 20 மெகா பிக்சலில் பொருத்தப்பட்டுள்ளது. ஒளி குறைவான நேரத்தில் புகைப்படமெடுக்க வசதியாக ஃப்ளாஷும் கொடுக்கப்பட்டுள்ளது. 4,000 எம்.ஏ.ஹெச் பேட்டரி நாளெல்லாம் உழைக்கும் திறன் கொண்டது.

ஆண்ட்ராய்ட் 8 இல்லாமல் போனது, உடனடி சார்ஜிங் வசதி மற்றும் டைப் சி கேபிள் இல்லாதது உள்ளிட்டவை இந்த மாடலில் சில ஏமாற்றங்கள்.

ஜியோமி ரெட்மி 5 ப்ரோ மொபைலின் 4ஜிபி பதிப்பின் விலை ரூ.13,999, 6 ஜிபி பதிப்பின் விலை ரூ.16,999.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x