Published : 23 Jan 2024 10:17 PM Last Updated : 23 Jan 2024 10:17 PM
ஒன்பிளஸ் 12 சீரிஸ் போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் ஒன்பிளஸ் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது அறிமுகமாகி உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே இந்த போன் குறித்த டாக் டெக் வட்டாரத்தில் அதிகம் இருந்தது.
ஒன்பிளஸ் 12 சிறப்பு அம்சங்கள்
6.8 இன்ச் டிஸ்பிளே
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 3 சிப்செட்
12ஜிபி/16ஜிபி ரேம்
256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ்
பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. 64 + 48 மெகாபிக்சல் கேமராவும் இடம்பெற்றுள்ளது
WRITE A COMMENT