Last Updated : 22 Jan, 2018 04:47 PM

 

Published : 22 Jan 2018 04:47 PM
Last Updated : 22 Jan 2018 04:47 PM

அமேசான் புது முயற்சி: பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட், இனி க்யூவில் நிற்க வேண்டாம்

சூப்பர்மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும் விதத்தில் அமேசான் நிறுவனம் புதிய புரட்சியே செய்துள்ளது. பணியாளர்கள் இல்லாமல், பில் போட க்யூவில் நிற்காமல் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க அமேசான் வகை செய்துள்ளது.

அமேசான் கோ  (Amazon Go) என்ற இந்த சூப்பர்மார்க்கெட்டின் சோதனை ஓட்டம் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் மேலே வைக்கப்பட்டிருக்கும் கேமரா வாடிக்கையாளரை அடையாளம் கண்டுகொண்டு அவர்கள் வாங்கும் பொருட்கள் என்ன, திரும்ப வைக்கும் பொருட்கள் என்ன என்பதை பதிவு செய்துகொள்ளும்.

வாங்கிய பொருட்களுக்கான பில் விலை, வாடிக்கையாளர் கடையை விட்டுப்  போகும்போது அவர்களின் கிரெடிட் கார்டிலிருந்து கழித்துக் கொள்ளப்படும். இதனால் பில் போட க்யூவில் நிற்க வேண்டியதில்லை.

ஷாப்பிங் ஆரம்பிப்பதற்கு முன் அமேசான் கோ என்ற ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் ஸ்கான் செய்து கொள்ள வேண்டும். பொருட்கள் இருக்கும் அலமாரிகளில் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். அவை வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் பொருள் என்ன என்பதை அடையாளம் கண்டு அதை பட்டியலில் சேர்க்கும். பொருளை திரும்ப வைத்துவிட்டால் பட்டியலிலிருந்தும் அந்தப் பெயர் நீங்கும்.

2016 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த சூப்பர்மார்கெட்டை அமேசான் பணியாளர்களை வைத்து சோதித்து வந்தனர். விரைவில் பொதுமக்களுக்கும் இது திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே மாதிரி உருவ அமைப்புடையவர்களை அடையாளம் காணுவதிலும், பொருட்களை வெவ்வேறு இடங்களில் குழந்தைகள் மாற்றி வைப்பதிலும் சில சிக்கல்கள் இருப்பதாகத் தெரிகிறது.

இதுபோன்ற கடைகளை மேலும் திறப்பது பற்றி அமேசான் தரப்பலிருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக அமேசான் வோல் ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தை 13.7 பில்லியனுக்கு வாங்கியிருந்தது. அதன் செயல்பாடு அமேசான் கோ போல இருக்காது.

அதிக நேரம் க்யூவில் நிற்பதை தவிர்ப்பதாலும், அதிவேகமாகம் பொருட்கள் வாங்கும் அனுபவத்தை தருவதாலும் அமேசான் கோ நல்ல வரவேற்பைப் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் கோ எப்படி வேலை செய்கிறது? வீடியோ கீழே

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x