Published : 22 Jan 2018 04:10 PM
Last Updated : 22 Jan 2018 04:10 PM
கடந்த வருடம் நான்கு கேமராக்கள் கொண்ட ஹானர் 9ஐ என்ற மொபைலை அறிமுகப்படுத்திய ஹுவாவை நிறுவனம் தற்போது அதே அம்சத்துடன், சற்றே விலை குறைந்த ஹானர் 9 லைட் மொபைலை அறிமுகம் செய்துள்ளது.
சந்தையில், ஓப்போ A83 மற்றும் சாம்சங் காலக்ஸ் ஆன் 7 ப்ரைம் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக ஹானர் 9 லைட் பார்க்கப்படுகிறது.
முக்கிய அம்சங்கள்
ஐஃபோன் 9 போன்ற தோற்றத்தில் இருக்கும் ஹானர் 9 லைட், ப்ளாஸ்டிக் ஃபிரேமுடன், முனையில் சிறிய வளைவுடன் கூடிய 2.5d க்ளாஸை முன்னும் பின்னும் கொண்டுள்ளது. பின்னாடி இருக்கும் கண்ணாடி போன்ற அமைப்பு இந்த வரிசையில் மற்ற மொபைல்களை விட சிறப்பாக சிராய்ப்புகளை தாங்கும் தன்மை கொண்டுள்ளது. முழு ஹெச்டி டிஸ்ப்ளேவுடன் 5.65 இன்ச் அகல திரையைக் கொண்டுள்ளது.
முன்னால் இரண்டு, பின்னால் இரண்டு என 4 கேமரா அமைப்பைக் கொண்டுள்ள இதன் திறன் 13 மெகாபிக்ஸல். செல்ஃபி மற்றும் போர்ட்ரெய்ட் புகைப்படங்களில் அழகுபடுத்தும் அம்சம் அவ்வபோது சிறப்பாக இருக்கிறது. பியூட்டிஃபை என்கிற அழகூட்டும் அம்சமும் நன்றாக வேலை செய்கிறது. செல்ஃபி எடுக்கும் போது முகத்தில் இருக்கும் சின்ன தழும்புகள் மறைந்து பொலிவாகக் காணப்பட்டது.
போர்ட்ரெய்ட்டில் படம் எடுக்கும்போது, போகே என்ற அம்சம் மிகச்சிறப்பாக கை கொடுக்கிறது. இந்த அம்சம் முன், பின் என இரண்டு கேமராக்களிலும் இருக்கிறது. ஆக்ட கோர் பிராசஸருடன் பயன்படுத்த இலகுவாகவும், வேகமாகவும் இருக்கிறது. 4 கேமரா அமைப்பிருந்தும், மொபைலின் மற்ற அம்சங்கள் ஒழுங்காகவே வேலை செய்கின்றன.
ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோ மென்பொருளில் ஓடும் இந்த மொபைலில் செயற்கை நுண்ணறிவுத் திறனும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3000mAH பேட்டரியினால் ஒருநாள் முழுக்க மொபைல உயிர்ப்போடு பயன்பட்டது.
கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்கள் நன்றாக இருந்தாலும் அவை கூடுதல் அம்சங்கள் சேர்ப்பதால் போலித்தனமாக காட்சியளிக்கின்றன. இதுவே இந்த மொபைலின் பிரச்சினை. இரண்டு பக்கமும் இருக்கும் கண்ணாடி அமைப்பால் மொபைலை ஒரு முறை கீழே போட்டாலும் அவ்வளவு தான்.
மொத்ததில், ரூ. 10,999க்கு ஹானர் 9 லைட்டின் 32ஜிபி மாடல் கிடைக்கிறது. இன்னும் அதிக இடம் வேண்டும் என்றால் 64ஜிபி மாடலும் கிடைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT