Published : 03 Nov 2017 09:50 AM
Last Updated : 03 Nov 2017 09:50 AM
இணைய ஏலத்துக்கான இணையதளங்களில் ஒன்றான இபே, தனது செயலியில் ஒளிப்படம் மூலமான தேடல் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இபே செயலியில், கேமரா பட்டனை அழுத்தி, ஒளிப்படத் தேடல் வாய்ப்பைத் தேர்வு செய்வதன் மூலம் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். அதன் பிறகு கேமராவில் படம் எடுத்து அதே போன்ற பொருள் இபே தளத்தில் விற்பனைக்கு இருக்கிறதா எனத் தேடலாம். இபே கேலரியில் உள்ள படங்களையும் இதற்காகப் பயன்படுத்தலாம்.
ஆண்ட்ராய்டு செயலியிலிருந்து இந்தத் தேடலைப் பகிரவும் செய்யலாம். மிகவும் துல்லியமான வசதி என்று சொல்லமுடியாவிட்டாலும் பயனுள்ள வசதி எனும் வகையில் இது அமைந்திருப்பதாகப் பயனாளிகள் கருதுகின்றனர். ஒளிப்படம் சார்ந்த தேடல் கைகொடுக்கும் என நினைக்கும் நேரத்தில் இதை முயன்று பார்க்கலாம்.
மேலும் விவரங்களுக்கு: http://anywhere.ebay.com/mobile/iphone/ebay/
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT