Published : 27 Nov 2017 11:12 AM
Last Updated : 27 Nov 2017 11:12 AM
அதிக எடை சுமக்கும் ட்ரோனை உருவாக்கியுள்ளது ரஷிய நிறுவனம். அவசர காலங்களில் இதன் மூலம் மக்களை காப்பாற்றலாம். 250 கிலோவரை சுமக்கும். பெட்ரோலில் இயங்கும். 3000 மீட்டர் உயரம் வரை பறக்கும்.
கையடக்க ஃபேன்
குளிர்ச்சியான காற்றை அளிக்கும் கையடக்க ஃபேன். உடற்பயிற்சி செய்கையில் அல்லது வெளியிடங்களில் இருக்கும்போது குளிர்ச்சியான காற்று தேவைக்கு பயன்படுத்தலாம். உடலில் எந்த இடத்திலும் ஆடைகளில் சொருகிக் கொள்ளலாம்.
ஏர் போன் பெட்டி
ஏர் போனை சரியாக பராமரிப்பவர்கள் குறைவு. சுருட்டி வைத்திருக்கும் ஏர்போனை ஒவ்வொரு முறையும் பிரித்து எடுப்பதற்கு பதில் அதற்கான பெட்டியை உருவாக்கியுள்ளனர். ஏர்போனை சிக்கல் இல்லாமல் எடுக்கவும், வைக்கவும் உதவும்.
இரும்பு இழை டயர்
டைட்டானியம் நிக்கலால் உருவாக்கப்பட்ட டயரை நாசா உருவாக்கியுள்ளது. மணல் பாங்கான இடங்கள், கரடு முரடான இடங்கள், அனைத்து கால நிலைக்கும் இந்த டயர் தாக்குபிடிக்கும். இந்த டயருக்கு காற்று தேவையில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட இரும்பு இழைகளால் பிணைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் குட்இயர் டயர் நிறுவனத்தில் பணியாற்றியபோது ஸ்பிரிங் டயரை உருவாக்கிய ஆராய்ச்சியாளர் ஒருவர் நாசாவுக்காக இந்த டைட்டானியம் டயரை உருவாக்கியுள்ளார். செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் ஆராய்ச்சி வாகனத்தில் இந்த டயர்களை நாசா பொருத்த உள்ளது.
எலெக்ட்ரிக் சைக்கிள் சாலை
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், சைக்கிள்கள் அதிகரித்தாலும் சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியவில்லை. இதற்காக பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய தீர்வை கண்டுபிடித்துள்ளது. புகையில்லாத, மின் வாகனங்களுக்கான உயர்மட்ட பாதையை சீனாவில் அறிமுகம் செய்கிறது. இந்த பாதை முழுவதும் ஹைபர்லூப் மாதிரி கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும். சீனாவின் ஷாங்காய் நகரில் 20 கிமீ நீளத்துக்கு, இரண்டு தடங்களில் இந்த பாதையை அமைக்க உள்ளது. ’விஷன் இ3 வே’ என பெயரிட்டுள்ள இந்த பாதை, பார்க்கிங் வசதியுடன் நகரின் அனைத்து முக்கிய இடங்களையும் இணைத்துச் செல்லும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT