Published : 30 Nov 2017 04:22 PM
Last Updated : 30 Nov 2017 04:22 PM
சீனத் தயாரிப்பான ஸியோமியின் மலிவு விலை ஸ்மார்ட்போன் ரெட்மி 5ஏ, இன்று (நவ.30) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.4,999 ஆக இருக்கும்.
இரண்டு வகைமைகளில் வெளிவரும் ரெட்மி 5ஏ போன், 2ஜிபி ரேம்/16 ஜிபி மெமரியோடு ரூ.4,999-க்கும் 3ஜிபி ரேம்/32பி மெமரியோடு ரூ.6,999-க்கும் கிடைக்கும்.
''அடுத்தகட்டமாக 50 லட்சம் 2ஜிபி ரேம் போன்கள் விற்றபிறகு, அதே மாடல் ரூ.5,999-க்கு விற்பனை செய்யப்படும். ரூ.1000 தள்ளுபடி இந்திய வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் பரிசு'' என்று ஜியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.
ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஹேண்ட்செட்
திரை: 5 இன்ச் எச்.டி டிஸ்ப்ளே
பிராசஸர்: 1.4 GHz குவாட்கோர் குவால்காம் பிராசஸர்
மெமரி: 2ஜிபி ரேம்/ 16ஜிபி மெமரி | 3ஜிபி ரேம்/ 32ஜிபி மெமரி (128 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ளும் வசதி)
கேமரா: 13 மெகா பிக்சல் ரியர் கேமரா, 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு நௌகட்
பேட்டரி: 3000mAh பேட்டரி திறன்.
எப்போது கிடைக்கும்?
ரெட்மி 5ஏ மாடல் டிசம்பர் 7-ம் தேதி முதல் ஃபிளிப்கார்ட், எம்ஐ இணையதளம், எம்ஐ விற்பனையகங்களில் கிடைக்கத் தொடங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT