Published : 09 Oct 2017 10:28 AM
Last Updated : 09 Oct 2017 10:28 AM
மாற்றுத் திறனாளிகளுக்கென்று பிரத்யேகமான வீல் சேர் இது. இந்த வீல் சேரை உயரத்துக்கு ஏற்ப பயன்படுத்த முடியும். மேலும் எலெக்ட்ரிக் சைக்கிள் என்பதால் சாதாரண சைக்கிளை விட அதிக வேகத்தில் செல்கிறது. ஒலிம்பிக் விளையாட்டில் மாற்றுத்திறனாளிகள் இந்த சைக்கிளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
பொம்மை ரோபோ
அனிமேஷன் படத்தில் வரும் பொம்மை போல் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஜோக்ஸ், கதைகள், வித்தியாசமான விஷயங்கள் பற்றி இந்த ரோபோ கூறுகிறது. பொம்மை ரோபோவில் சின்ன திரை இருப்பதால் அதன் மூலம் கதைக்கான படங்களும் வருகிறது.
ஏடிஎம் வாலட்
பொதுவாக ஏடிஎம் கார்டுகளை வைப்பதற்கு தனி வாலட் வந்துவிட்டது. இந்த வாலட்டிலிருந்து ஏடிஎம் கார்டுகளை எடுப்பதற்கு தனியான பொத்தான் இருக்கிறது. அந்த பொத்தானை அழுத்தினால் வாலட்டிலிருந்து ஏடிஎம் கார்டுகள் வெளியே வருகின்றன. தேவையான கார்டை எளிதாக எடுக்கமுடியும்.
பேட்டரி விமானம்
போயிங் விமான தயாரிப்பு நிறுவனமும், ஜெட்புளூ ஏர்வேஸ் நிறுவனமும் இணைந்து, சிறிய அளவிலான ஹைபிரிட்-எலெக்ட்ரிக் பயணிகள் விமானத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளன. இதற்காக சியாட்டிலை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன. செயற்கை நுண்ணறிவு மற்றும் இரண்டு பேட்டரி இன்ஜின்கள் மூலம் இந்த விமானம் இயங்கும். 1600 கிலோமீட்டர் பயணிக்கும். 12 இருக்கைகள் கொண்ட இந்த விமானம் 2022-ம் ஆண்டு விற்பனைக்கு வர உள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் 50 பேர் பயணிக்கும் விமானத்தை கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளனர்.
புகை வராத அடுப்பு
புகை வராத விறகு அடுப்பை உருவாக்கியுள்ளது பயோலைட் என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனம். இந்த விறகு அடுப்பு மூன்று பக்கமும் காற்று புகும் வகையிலான தடுப்புகளால் மூடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் மூலம் அடுப்பின் வெப்பத்தை கூட்டவும் குறைக்கவும் செய்யலாம். அடுப்பிலிருந்து மின்சக்தியை சேமிக்க பக்கவாட்டில் பேட்டரியும் உள்ளது. இதில் செல்போன், லேப்டாப், சிறிய லைட் போன்றவற்றுக்கு சார்ஜ் ஏற்றலாம். சோலார் பேனல் மூலம் மின்சக்தியை இந்த பேட்டரியில் சேமிக்கலாம். எல்லா இடங்களுக்கும் தூக்கிச் செல்வதும் எளிது. அடுப்பின் மேல் இரும்பு வலை வைத்து சமைக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT