Published : 30 Oct 2017 12:02 PM
Last Updated : 30 Oct 2017 12:02 PM
லண்டனில் உள்ள லே பெடிட் செஃப் உணவகம், உணவு மேசையில் 3டி அனிமேஷன் வசதியை ஏற்படுத்தியுள்ளது. மெனு கார்ட், உணவு தட்டு, உணவு போன்றவற்றில் வாடிக்கையாளர்கள் அனிமேஷன் காட்சிகளை பார்த்து ரசிக்கலாம்.
டெண்ட் ஆகாத கார்
டோக்கியோ கார் கண்காட்சியில் டொயோடா நிறுவனம் டெண்ட் ஆகாத எதிர்கால காரை காட்சிபடுத்தியுள்ளது. பிளாஸ்டிக் மற்றும் ரப்பாரால் ஆன உதிரிபாகங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. முழு பாகங்களும் எல்இடி வசதி கொண்டது.
ரோபோ குடியுரிமை
உலக அளவில் முதன் முதலில் சவுதி அரேபிய அரசு சோபியா என்கிற ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி உள்ளது. இந்த ரோபோவை ஹாங்காங்கைச் சேர்ந்த நிறுவனம் பெண் உருவில் உருவாக்கியுள்ளது. அச்சு அசல் மனிதர்களை போல சகஜமாக பேசியுள்ளது.
ஆளில்லா படகு
ஆர்டிக் கடல் பகுதியின் காலநிலையை அறிய சாயில்டிரான் என்கிற ஆளில்லாத படகை செலுத்தியுள்ளது அமெரிக்க நிறுவனம். உலகம் முழுவதும் இதுபோன்ற 1000 ஆளில்லாத படகை செலுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சாதாரண படகை இயக்க ஆகும் செலவில் 5 சதவீதம் செலவு செய்தால் போதும். அமெரிக்க கடல் ஆராய்ச்சி துறை, விண்வெளி ஆராய்ச்சி துறை, உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு இந்த படகு காலநிலை குறித்த தகவல்களை அளிக்கும். நீர் மூழ்கி கப்பல்கள், சட்டவிரோக கடத்தல்கள் போன்றவற்றை கண்காணிக்கவும் இந்த ஆளில்லா படகு பயன்படும்.
புனைவு நகரம்
தென்மேற்கு சீனாவில் வித்தியாசமான வகையில் சுற்றுலா நகரம் கட்டப்பட்டு அடுத்த மாதம் திறக்கப்பட்ட உள்ளது. ஹாலிவுட் திரைப்பட கற்பனை காதாபாத்திரங்களை பிரமாண்டமாக இங்கு உருவாக்கி வருகின்றனர். வேற்று கிரகம், ஏலியன்ஸ், டிராகன் போர் என கற்பனை மற்றும் அறிவியல் புனைவுகள் கட்டிடங்களாக நிற்கின்றன. டிரான்ஸ்பார்மர் கதாபாத்திரம் 174 அடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் உலகம் முழுவதிலுமுள்ள அறிவியல் ஆர்வ சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் என்று இதை உருவாக்கியுள்ள ஓரியண்டல் டைம்ஸ் மீடியாவின் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT