Published : 07 Jul 2014 09:16 AM
Last Updated : 07 Jul 2014 09:16 AM

தமிழக அரசு எனக்கு உதவி செய்யவேண்டும்: இராக்கிலிருந்து திரும்பிய நர்ஸ் மோனிஷா வலியுறுத்தல்

இராக்கில் தீவிரவாதிகள் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட செவிலி யர் லெசிமா ஜெரோஸ் மோனி ஷாவை, தூத்துக்குடியில் உறவினர் கள் உற்சாகமாக வரவேற்றனர்.

இராக் திக்ரித் அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றிய இந்திய செவிலியர்கள் 46 பேர் வெள்ளிக்கிழமை விடுவிக்கப் பட்டனர். இவர்களில், தூத்துக்குடி கால்டுவெல் காலனி 5-வது தெரு பிளாஸி லோபஸ் என்பவரின் மகள் லெசிமா ஜெரோஸ் மோனிஷா (25) என்பவரும் ஒருவர். (எஞ் சிய 45 பேரும் கேரளத்தைச் சேர்ந்த வர்கள்). சனிக்கிழமை இரவு 10.50 மணிக்கு தூத்துக்குடி வந்த மோனி ஷாவை உறவினர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

கடந்த ஒரு மாத காலமாக சோக மயமாக காட்சியளித்த மோனி ஷாவின் வீடு, சனிக்கிழமை இரவு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது. மோனிஷா பத்திரமாக திரும்பி வந்ததை தொடர்ந்து அவரது வீட்டில் சிறப்பு பிரார்த் தனை நடந்தது.

முடங்கி கிடந்தோம்

மோனிஷா கூறும்போது, ‘இராக் உள்நாட்டு போர் காரண மாக ஜூன் 12-ம் தேதியில் இருந்து மருத்துவமனையில் சிறைபட்டிருந் தோம். வெளியில் தொடர்ந்து வெடி குண்டு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். அறையில் இருந்தாலும் உயிரை கையில் பிடித்து கொண்டு தான் இருந்தோம்.

அங்கு சாப்பாடு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் எங்களுக்கு கிடைத்தன. இந்திய தூதரக அதிகாரி களை தொடர்ந்து தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி வந் தோம். அவர்கள், ‘எதற்கும் பயப் பட வேண்டாம். விரைவில் நீங் கள் பத்திரமாக மீட்கப்படுவீர்கள்’ என தைரியம் அளித்து வந்தனர்.

கண்ணியமாக நடத்தினர்

ஜூலை 3-ம் தேதி மதியம் 12 மணிக்கு, ஒரு பஸ்சில் ஏற தீவிரவாதிகள் எங்களை வற்புறுத் தினர். நாங்கள் மறுத்தோம். அப்போது ஒரு வெடிகுண்டை எங்கள் அருகிலேயே வெடிக்கச் செய்தனர். குண்டுகளின் சிதறல்கள் எங்கள் உடம்பில் பட்டு காயம் ஏற்பட்டது. வேறு வழியின்றி பஸ் ஸில் ஏறினோம். அன்று மாலை 5 மணிக்கு மோசூல் நகரில் உள்ள, பாழடைந்த ஜெயில் கட்டிடத்தில் தங்க வைத்தனர். சாப்பாடு மற்றும் தண்ணீர், ஜூஸ் கொடுத்து நன்றாக கவனித்து கொண்டனர். பின்னர், ஜூலை 4 ம் தேதி காலை 8 மணிக்கு எங்களை விடுவித்தனர். அனைவரின் பிரார்த்தனை, தூதரக அதிகாரிகளின் கடுமையான முயற்சி யும்தான் நாங்கள் உயிருடன் திரும்ப காரணம்.

அரசு உதவ வேண்டும்

நாங்கள் விடுவிக்கப்பட்டதி லிருந்து கேரள அரசு அனைத்து உதவிகளையும் செய்தது. அவர் களின் மாநிலத்தை சேர்ந்த 45 செவிலியர்களுக்கும், அரசு வேலை தருவதாக உறுதியளித் துள்ளது. மேலும், கல்விக்கடன் ரத்து செய்யப்படும், நிவாரண உதவிகள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். அவர்கள் தீவிர வாதிகளின் பிடியில் இருக்கும் போதே கேரள அரசு இதைத் தெரிவித்துவிட்டது. தமிழக அரசு தரப்பில் இருந்து, இதுவரை எந்த தகவலும் இல்லை. தமிழக அரசு எனக்கு உதவி செய்ய வேண்டும். எங்களை மீட்க உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x