Published : 30 May 2023 07:00 PM
Last Updated : 30 May 2023 07:00 PM
சென்னை: தருமபுரி அரசு குடோனில் மாயமான 7,000 டன் நெல் மூட்டைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தை மட்டுமே தமிழக மக்களுக்கு பரிசளித்து வரும் இந்த திமுக ஆட்சியில், தற்போது தருமபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000 டன் நெல் மாயமாகி உள்ளதாக செய்திதாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள், 7000 டன் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
மக்கள் வரிப்பணத்தில் உல்லாசப் பயணம் சென்றிருக்கும் இந்த சர்க்கஸ் அரசின் முதல்வர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு நெல் மூட்டைகள் மாயமாவதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாயமான 7000 டன் நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தை மட்டுமே தமிழக மக்களுக்கு பரிசளித்து வரும் இந்த விடியா திமுக ஆட்சியில், தற்போது
தர்மபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000 டன் நெல் மாயமாகி உள்ளதாக செய்திதாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான்…— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 30, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT