Published : 29 May 2023 06:14 AM
Last Updated : 29 May 2023 06:14 AM
சென்னை: நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஃபவுண்டேஷனுக்கு என்ன தொடர்பு எனபாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
கல்லால் குழும நிறுவனத்தில் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த நிறுவனம் முதலீடு செய்திருந்தது. இந்நிலையில், போலி ஆவணங்கள் மூலம் போர்ச்சுக்கல் நாட்டைசேர்ந்த நிறுவனத்தை கல்லால்நிறுவனம் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்நிறுவனத்தில் இயக்குநர்களை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், கல்லால் நிறுவனத்துடன் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக லைகா நிறுவனம், உதயநிதி ஸ்டாலின் ஃபவுண்டேஷன் சொத்துகள் மற்றும் வங்கி கணக்கில் இருந்தஇருப்பு தொகையையும் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் முடக்கியுள்ளது.
இந்நிலையில், ஒரே முகவரியில் உதயநிதி ஸ்டாலின் ஃபவுண்டேஷன் மற்றும் நோபல் ப்ரிக்ஸ்என்ற நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
ரூ.1,000 கோடி முதலீடு: இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ‘திமுக பைல்ஸ்’ வெளியிட்டபோது நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு குறித்த கேள்வி எழுப்பியிருந்தோம். ஆனால், முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு இன்றுவரை பதிலும் வரவில்லை.
இந்நிலையில், முறைகேடான பணப்பரிவர்த்தனை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் ஃபவுண்டேஷன் அமலாக்கத்துறையிடம் சிக்கியுள்ளது. நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கிவந்த அதே விலாசத்தில்தான், உதயநிதி ஸ்டாலின் ஃபவுண்டேஷன் இயங்கிவருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? இந்த கேள்விக்காவது பதில் வருமா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment