Published : 28 May 2023 06:53 AM
Last Updated : 28 May 2023 06:53 AM

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற ஆதரவு தெரிவித்து கோவையில் ரசிகர்கள் கொண்டாட்டம்

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற ஆதரவு தெரிவித்து, ஐடிசி சன்பீஸ்ட் சூப்பர் மில்க் பிஸ்கட் பிராண்ட் சார்பில் கோவையில் நேற்று நடந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட ரசிகர்கள்.

கோவை: ஐடிசி சன்பீஸ்ட் சூப்பர் மில்க் பிஸ்கட் சார்பில் ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற ஆதரவு தெரிவித்து, கோவையில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல லட்சம் ரசிகர்களின் ஆதரவு பெற்ற கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதி போட்டி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், முக்கிய அணியான சிஎஸ்கே அணியின் அங்கீகரிக்கப்பட்ட பார்ட்னராகஐடிசி சன்பீஸ்ட் சூப்பர் மில்க் பிஸ்கட் உள்ளது. இந்நிறுவனத்தின் சார்பில், இன்று நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற ஆதரவு தெரிவித்து, ‘ஸ்ட்ராங்கா... விசில் போடு’ என்ற தலைப்பில் ரசிகர்களை இணைத்து ஆதரவு கொண்டாட்ட வாகன ஊர்வலம் கோவையில் நேற்று நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சிஎஸ்கே அணியின் வாழ்த்து கோஷங்களுடன் அலங்கரிக்கப்பட்ட பேனர்கள் பொருத்தப்பட்ட வேனில், மிகப்பெரிய விசிலின் மாதிரி வைக்கப்பட்டு, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மீடியா டவர் அருகே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, மஞ்சள் நிற ஜெர்சி அணிந்த ஏராளமான சிஎஸ்கே அணி ரசிகர்கள் அங்கு வந்தனர். சிஎஸ்கே அணியை வாழ்த்தும் பாடல்கள் மெகா ஒலி பெருக்கியில் ஒலிபரப்பப்பட்டன.

ஐடிசி சன்பீஸ்ட் சூப்பர் மில்க் பிஸ்கட் சார்பில் உருவாக்கப்பட்ட ரெடி, மடி, அடி பாடலும் வெளியிடப்பட்டது. இந்த பாடல்களுக்கு ரசிகர்கள் குழுக்களாக சேர்ந்து, நடனமாடினர். அதைத் தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் மீடியா டவரில் இருந்து ‘விசில்’ மாதிரி அலங்கரிக்கப்பட்ட வேன் புறப்பட்டது. அந்த வேன் 3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ரேஸ்கோா்ஸ் நடைபாதையை சுற்றி ரசிகர்கள் ஆதரவுடன் ஊர்வலமாக வலம் வந்தது.

பின்னர், இந்த வேன் அவிநாசிசாலை வழியாக வஉசி மைதானத்தை வந்தடைந்தது. தொடர்ச்சியாக, சிஎஸ்கே குறித்தும், ஐடிசி சன்பீஸ்ட் சூப்பர் மில்க் பிஸ்கட் பிராண்ட் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்த ரசிகர்களுக்கு மஞ்சள் நிற டீ சர்ட் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், ஐடிசி சன்பீஸ்ட் சூப்பர் மில்க் பிஸ்கட் பொது மேலாளர் பிரசாந்த் பாண்டே, மேலாளர் குஷால் குப்தா, கோவை கிளை மேலாளர் ஹர்ஷா கிரன், உதவி மேலாளர் அல்போன்ஸ் ராஜ், ஏரியா விற்பனைப் பிரிவு மேலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x