Published : 22 May 2023 07:16 PM
Last Updated : 22 May 2023 07:16 PM

ஆவின் பணியாளர்களுக்கு 12 உத்தரவுகள்: நிர்வாக சீரமைப்பு தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் அதிரடி 

அமைச்சர் ஆய்வு

சென்னை: ஆவின் பணியாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று 12 உத்தரவுகளை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பிறப்பித்துள்ளார்.

ஆவின் பணியாளர்கள் அனைவரும் 12 உத்தரவுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தி உள்ளார். நிர்வாக சீரமைப்பு தொடர்பாக இந்த 12 உத்தரவுகளை அமைச்சர் பிறப்பித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம்:

  • பால் கொள்முதல் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பளம் அவரவர் வங்கி கணக்குகள் மூலம் மட்டுமே வழங்க வேண்டும்.
  • பால் பதப்படுத்துதல், பேக்கேஜிங் மற்றும் லோடிங் செய்யும் இடங்களிலும் பிரதான வாயிலிலும் CCTV கண்காணிப்பை மேம்படுத்துதல்.
  • Bio Metric மூலம் பணியாளர்களின் வருகை பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும்.
  • அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கும் FC மற்றும் வாகனத்தின் நிலை, சுத்தம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்தல்
  • விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் தொடங்கி BMC மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களுக்கு வந்தடைந்தடையும் கால இடைவேளையை அதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் வந்தடைவதை உறுதிபடுத்த வேண்டும்.
  • கூட்டுறவு பால்கொள்முதல் நிலையங்கள் தனிநபர்களுக்கு பால் விற்பனை செய்வதை நிர்ணயிக்கப்பட்ட 10% அளவிற்கு கட்டுப்படுத்த வேண்டும் முடியாத சூழலில் அவற்றை கூட்டுறவு சங்க கணக்குகளில் முறையாக பதிவு செய்ய வேண்டும்.
  • தனியார் பால் நிறுவனங்கள் அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்வதும் அவற்றில் சர்க்கரை, யூரியா, ஸ்டார்ச் உள்ளிட்ட பல்வேறு வேதிப் பொருட்கள் கலப்படம் செய்து பாதுகாப்பு விதிகளை மீறி உரிய அனுமதியின்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதை தடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களின் உதவியுடன் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • பால் பதப்படுத்துதல் மற்றும் கையாளுவதில் வரும் இழப்பை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பால் உற்பத்தியாளர்களுக்கு குறித்த நேரம் தவறாமல் பணம் பட்டுவாடா செய்தல்.
  • ஆவின் அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான கணினி மற்றும் ICT பயிற்சிகளை உடனடியாக அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • ஆவின் பால்பண்ணைகள் மற்றும் பார்லர்களை சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் வைத்திருக்க வேண்டும்.
  • கூட்டுறவு சங்கங்களிலிருந்து BMC-களுக்கு பால் எடுக்கப்படும் பொழுது கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை அந்த இடத்திலேயே அளவீடு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • BMC மையங்களில் இருந்து ஒன்றியத்திற்கு பால் எடுக்கப்படும் பொழுது அங்கேயே கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை அந்தந்த இடத்திலேயே அளவீடு செய்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x