Published : 22 May 2023 06:10 AM
Last Updated : 22 May 2023 06:10 AM

தொலைதூர பேருந்துகளில் 50% கட்டண சலுகை

சென்னை: விரைவு பேருந்துகளில் ஒரே மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணம் செய்வோருக்கு 6-வது பயணம் முதல் 50 சதவீத கட்டணச்சலுகை வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து விரைவு போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியதாவது: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் மிதவை, இருக்கை,படுக்கை, குளிர்சாதன வசதி, கழிவறை உள்ளிட்ட பல்வேறு சொகுசுவசதிகளைக் கொண்ட 1,078பேருந்துகள் உள்ளன. இப்பேருந்துகள் 300 கி.மீ-க்கு மேற்பட்ட நீண்ட தூர பயணத்துக்காக 251 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பட்ஜெட் கூட்டத் தொடரின் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில், "அரசு விரைவுபோக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்வோருக்கு சிறப்பு சலுகையாக அடுத்த தொடர் பயணங்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்" என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவித்தார்.

இந்தச் சலுகை திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.ஒரு மாதத்தில் 5 முறை தொடர்ச்சியாக முன்பதிவு செய்த பிறகு, 6-வது முறை முதல் தானாகவே 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கும் வகையில் www.tnstc.in இணையதளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 3 பேர்பயனடைந்துள்ளனர்.

வாடகை சுமைப்பெட்டி: இளைஞர்கள் சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டும் வகையில், விரைவு பேருந்துகளில் உள்ளசுமைப் பெட்டிகள் மாதம் ரூ.6ஆயிரம் வாடகைக்கு வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ்இதுவரை நெல்லை, சேலத்தைச்சேர்ந்த இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சுமைப்பெட்டியை பயன்படுத்திக் கொள்ள உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இருவரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. உரிமம் பெற்றவர்கள்.

விவசாயிகள், வியாபாரிகள் போன்றோரின் பொருட்களை ஏற்றி, இறக்க நியாயமான கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம். ஒரு பேருந்தில் உள்ள பெட்டியில் 100 கிலோ வரை ஏற்றிச் செல்ல முடியும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரைவு போக்குவரத்துக் கழக அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x