Published : 19 May 2023 10:31 AM
Last Updated : 19 May 2023 10:31 AM
சென்னை: 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் 87.45 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 1,026 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்வு பெற்றள்ளது.
10-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இதன்படி, மொத்தம் தேர்வு எழுதிய 9,14,320 மாணவ, மாணவியர்களில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.39, இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4,30,710. மாணவர்களின் எண்ணிக்கை 4,04,904, மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 94.66. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.16. மாணவர்களை விட மாணவியர்கள் 6.50 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 12,638 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.45 சதவீதம். அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.24 சதவீதமும், தனியார் பள்ளிகள் 97.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.
இதைத்தவிர்த்து இரு பாலர் பயின்ற பள்ளிகள் 91.58 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 83.25 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 94.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 3,718 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,026 ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT