Published : 18 May 2023 06:14 AM
Last Updated : 18 May 2023 06:14 AM
திண்டுக்கல்: மாவட்ட ஆட்சியர், பல்வேறு துறைகளில் முதன்மை அதிகாரிகள் என மகளிர் ஆளுமையின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் செயல்பட உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த ச.விசாகன் பணியிட மாறுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து எம்.என்.பூங்கொடி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக சேலத்தில் சோகோசர்வ் மேலாண்மை இயக்குநராகப் பணிபுரிந்தார். தமிழ்நாடு முதல்வரைச் சந்தித்த பின் நாளை (வெள்ளிக்கிழமை) திண்டுக்கல் ஆட்சியராகப் பொறுப்பேற்பார் என தெரிகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் முன் னதாக வாசுகி, அமுதா, விஜயலட்சுமி என மூன்று பெண் ஆட்சி யர்கள் பணிபுரிந்துள்ளனர். இவர் நான்காவது பெண் ஆட்சியராகப் பணிபுரிய உள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சிய ராகப் பொறுப்பேற்க உள்ள எம்.என்.பூங்கொடி தலைமையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட உள்ள நிலையில், இவருக்கு துணையாக வருவாய் நிர்வாகத்தைக் கவனிப்பவரும் ஒரு பெண்ணே. மாவட்ட வருவாய் அலுவலராக வே.லதா பணியில் உள்ளார்.
வருவாய்த் துறைக்கு அடுத்த படியாக ஊராட்சி நிர்வாகத்தை கவனிக்கும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநராக திலகவதி உள்ளார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளராக (வளர்ச்சி) ராணி பணி புரிந்து வருகிறார்.
மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் ஜெயச்சித்திரகலா, மாவட்ட பிற்பட்டோர் நலத் துறை அலுவலராக விஜயா, வேளாண்மைத் துறையில் முதன்மைப் பொறுப்பான மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநராக அனுசியா என பெண்களே மாவட்ட அளவில் அதிகாரிகளாக உள்ளனர்.
மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் பூங்கொடி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பிரபாவதி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலு வலக மேலாளர்களாக மீனா, லட் சுமி, வட்டாட்சியர்களாக சுகந்தி, கீதா, தமிழ்ச்செல்வி, விஜயலட்சுமி என அடுத்தடுத்த நிலை யிலும் பெண் அதிகாரிகளே உள் ளனர்.
மேலும், பேரூராட்சிகளின் உதவி இயக்குநராக மனோரஞ்சிதம் திண் டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பேரூராட்சிகளையும் நிர்வகித்து வருகிறார். இதோடு மட்டுமில்லாமல் திண்டுக்கல் மாநக ராட்சி ஆணையராக மகேஸ்வரி என்ற பெண் அதிகாரி சில மாதங் களுக்கு முன்பு பொறுப்பேற்றார்.
திண்டுக்கல் மாவட்ட தலைமை, மாவட்ட வருவாய் நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி கள், வேளாண்மைத் துறை, சமூகநலத் துறை, குழந் தைகள் வளர்ச்சித் திட்டம் என முக்கிய மாவட்டப் பொறுப்புகளில் பெண் அதிகாரிகளே உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமை முதற்கொண்டு பல துறைகள் பெண் அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதனால், திண்டுக்கல் மாவட்டம் முழு வதும் பெண் அதிகாரிகளின் ஆளு மையின் கீழ் வந்துள்ளது.
மக்களின் எதிர்பார்ப்புகள்: புதிய ஆட்சியராகப் பொறுப் பேற்க உள்ள எம்.என்.பூங்கொடி, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தில் மக்களின் குறைகளை உடனுக் குடன் தீர்க்க வேண்டும். பெண் கள் முன்னேற்றத்துக்குத் தனி முக்கியத்துவம் தரவேண்டும். மாற்றுத் திறனாளிகளின் கோரிக் கைகளை உடனுக்குடன் நிறை வேற்ற வேண்டும்.
விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வளர்ச்சித் திட்டங் களை விரைவாக மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என் பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT