Published : 17 May 2023 09:11 PM
Last Updated : 17 May 2023 09:11 PM

கள்ளச் சாராய உயிரிழப்புகள் | ஆளுநரைச் சந்திக்க அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

சென்னை: கள்ளச் சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட வலியுறுத்தி அவரை நேரில் சந்தித்து மனு அளிக்க அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச் சாராயம் அருந்திய 22 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக தலையிட வலியுறுத்தி, எம்எல்ஏக்களுடன் சென்று அதிமுக சார்பில் மனு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், மதுரையில் நடைபெறவுள்ள அக்கட்சியின் பொன்விழா மாநாடு குறித்தும், அதுதொடர்பாக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, கள்ளச் சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரத்தில், இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார்.

தமிழகத்தில் கள்ளச் சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரத்தில் இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? கள்ளச் சாராயம் எப்படி விற்கப்படுகிறது? கள்ளச் சாராயம் விற்கப்படவில்லை எனில், எப்படி ஒரே நாளில் இத்தனை பேர் கைது செய்யப்பட்டது ஏன்? - இவை குறித்து அரசின் தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார். | வாசிக்க > கள்ளச் சாராய மரணங்கள்: தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்பு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x