Published : 17 May 2023 04:34 PM Last Updated : 17 May 2023 04:34 PM
வாட்ஸ்அப் மூலம் சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவது எப்படி? - விரிவான விளக்கம்
சென்னை: வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கி உள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 66 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள், ரயில் நிலையங்களில் உள்ள கவுன்டர்கள், இணையதளம், பயண அட்டை, சிங்காரச் சென்னை அட்டை மூலம் பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில், வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கி உள்ளது. டிக்கெட் பெறுவது எப்படி?
வாட்ஸ்அப் எண்ணில் இருந்து 83000 86000 என்ற எண்ணிற்கு Hi என்ற அனுப்ப வேண்டும்.
உங்களின் எண்ணில் புக் டிகெட், அருகில் உள்ள ரயில் நிலைங்கள், மற்ற சேவைகள் என்று 3 வகையான சேவைகளை பெற முடியும்.
இதில் புக் டிக்கெட் என்ற சேவையை தேர்வு செய்ய வேண்டும்.
இதன்பிறகு நீங்கள் பயணம் செய்ய உள்ள ரயில் நிலையத்தை தேர்வு செய்ய வேண்டும்.
எத்தனை டிக்கெட் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
நீங்கள் அளித்த தகவல்களை மீண்டும் ஒரு முறை சரிபார்க்க வேண்டும்.
கட்டணம் செலுத்தும் வழிமுறையை தேர்வு செய்ய கட்டணம் வேண்டும்.
கட்டணம் செலுத்தி பிறகு டிக்கெட் உங்களின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.
WRITE A COMMENT