Published : 11 May 2023 04:56 PM
Last Updated : 11 May 2023 04:56 PM
சென்னை: பல்வேறு வேலைவாய்ப்புகள் இருப்பதாக பொய்யாக இணையதளத்தில் செய்திகளை வெளியிடுவோர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இணையதளத்தில் வெளியாகும் பொய்யான செய்திகளை விளம்பரங்களை நம்பி, அதிகாரப்பூர்வமற்ற தனியாரிடம் வேலைதேடி இழப்புகள் ஏற்பட்டால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொறுப்பேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் இருப்பின் அதற்கான அறிவிப்புகள் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். அவைதான் உண்மையான அறிவிப்புகள். பிற இணையதளம் மற்றும் வாட்ஸ்அப் (Whatsapp) போன்றவற்றில் அவ்வப்போது வெளிவரும் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பணியாளர்களைத் தேர்வு செய்யும் பணி, எந்தவொரு தனி மனிதருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்கப்படவில்லை. பணியாளர்கள் தேவையின்போது அதற்கான முன் அறிவிப்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.chennaimetrorail.org என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும். இதைத்தவிர தமிழ், ஆங்கில நாளிதழ் மற்றும் வேலைவாய்ப்பு செய்தித்தாள்களில் (Employment News) அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.
எனவே, வேலைவாய்ப்புக்கு தகுதியுடையவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளிவரும் அறிவிப்புகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இதைத்தவிர வேறு எந்தவொரு இணையதளம் மற்றும் வாட்ஸ்அப்பில் வெளிவரும் போலியான சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலைவாய்ப்பு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்நிறுவத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் இருப்பதாக பொய்யாக இணையதளத்தில் செய்திகளை வெளியிடுவோர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இணையதளத்தில் வெளியாகும் பொய்யான செய்திகளை விளம்பரங்களை நம்பி, அதிகாரபூர்வமற்ற தனியாரிடம் வேலைதேடி இழப்புகள் ஏற்பட்டால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொறுப்பேற்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT