Published : 11 May 2023 01:09 PM
Last Updated : 11 May 2023 01:09 PM
சென்னை: நிர்வாகக் காரணங்களுக்காக அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஹூண்டாய் நிறுவனம் தமிழகத்தில் ரூ.20,000 கோடி முதலீடு செய்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் புதிதாக பதவியேற்ற தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "தொழில்துறை அமைச்சராக ஏற்கனவே பொறுப்பு விகித்திருந்த அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அதிகாரிகள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று முன்னணியில் உள்ள தொழில் துறையினரைச் சந்தித்து முதலீடுகளை ஈர்த்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரிய உதவிகளைச் செய்தனர். இதற்காக, அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைக்கு புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள டி.ஆர்.பி ராஜா சிறப்பாக செயல்பட்டு அதிக முதலீட்டை ஈர்ப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிர்வாகக் காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாக்காக்கள் மாறினாலும், தமிழக அரசு தொழில்துறையினருக்கு அளித்து வரும் ஆதரவும், தொழில் வளர்ச்சிக்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் என்றும் தொடரும்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT