Published : 10 May 2023 12:13 PM
Last Updated : 10 May 2023 12:13 PM

25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம் - வேளாண்மைத்துறை அறிவிப்பு

சிறு தானியங்கள் | கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம் அமைக்கப்படும் என்று வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது.

தொன்மை மிக்க ஊட்டச்சத்து நிறைந்த, சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகள் போன்ற உணவுகளை வழங்கி நுகர்வோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம் அமைக்கப்படும் என்று வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தேனி, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் இந்த உணவகங்களை அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மட்டுமே உணவகம் நடத்த வேண்டும். சிறுதானிய உணவுகள், புவிசார் குறியீடு பெற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும். உணவகத்திற்கு இலக்கிய நயம் சார்ந்த பெயர் சூட்டப்பட்டு பலகையில் எழுத வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x