Published : 09 May 2023 06:10 AM
Last Updated : 09 May 2023 06:10 AM

திருநெல்வேலி - செங்கோட்டை ரயில்களின் வேகம் அதிகரிப்பு: முக்கிய ரயில்களுக்கு இணைப்பு கிடைப்பதால் பயணிகள் மகிழ்ச்சி

தென்காசி: திருநெல்வேலி - செங்கோட்டை இடையே ரயில்களின் வேகம் நேற்று முன்தினம் முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

திருநெல்வேலி- செங்கோட்டை இடையே காலை 7, 9.45, மதியம் 1.50, மாலை 6.15 மணிக்கு என 4 ரயில்களும், செங்கோட்டை - திருநெல்வேலி இடையே காலை 6.40, 10.05, மதியம் 2.55, மாலை 5.50 மணி என 4 ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இரவு 11.30 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி தினசரி ரயிலும், திருநெல்வேலி - தாம்பரம், செங்கோட்டை - தாம்பரம், திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் ஆகிய வாராந்திர ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் காலை 7 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி - செங்கோட்டை ரயில் நெல்லை ரயில் அனந்தபுரி, பெங்களூரு - நாகர்கோவில் ஆகிய ரயில்களுக்கும், காலை 9.45 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி - செங்கோட்டை ரயில் நாகர்கோவில் - கோவை, திருச்செந்தூர் - நெல்லை ரயில்களுக்கும், மதியம் 1.50 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி - செங்கோட்டை ரயில் பாலக்காடு - திருச்செந்தூர், திருச்செந்தூர் - பாலக்காடு ரயில்களுக்கும் இணைப்பாக உள்ளது.

மாலை 6.15 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி - செங்கோட்டை ரயில் கோவை - நாகர்கோவில், திருச்செந்தூர் - நெல்லை ரயில்களுக்கும், காலை 6.40 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - நெல்லை ரயில் நாகர்கோவில் - கோவை, சென்னை குருவாயூர் ரயில்களுக்கும், காலை 10.05 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - நெல்லை ரயில் திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி, திருச்செந்தூர் - பாலக்காடு ரயில்களுக்கும், மாலை 02.55-க்கு புறப்படும் செங்கோட்டை - நெல்லை ரயில் தாம்பரம் அந்த்யோதயா, நாகர்கோவில் - தாம்பரம் வாரம் மும்முறை ரயில்களுக்கும், மாலை 5.50-க்கு புறப்படும் செங்கோட்டை - நெல்லை ரயில் நாகர்கோவில் - பெங்களூரு, சென்னை செந்தூர், டெல்லி திருக்குறள், ஹவுரா ரயில்களுக்கும் இணைப்பாக உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, “செங்கோட்டை - திருநெல்வேலி வழித்தட மக்கள் தாம்பரம் அந்த்யோதயா ரயிலை பிடிக்க இணைப்பு ஏற்பட்டுள்ளதை போல, திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிப்பதற்கு அதிகாரபூர்வமாக அட்டவணையில் மாற்றம் செய்தால் வள்ளியூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம் பகுதிகளுக்கு நேரடியாக செல்வதற்கு இணைப்பு கிடைக்கும். இரவு சென்னை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இணைப்பு ஏற்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x