Published : 07 May 2023 07:16 AM
Last Updated : 07 May 2023 07:16 AM

விஏஓ கொலையை கண்டித்து மே 28-ல் தேமுதிக ஆர்ப்பாட்டம்

சென்னை: கிராம நிர்வாக அலுவலர் கொலையை கண்டித்து தேமுதிக சார்பில் ஆலங்குளத்தில், வரும் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கட்சித் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலையைக் கண்டித்தும், அனுமதி பெற்ற அளவைவிட ஆயிரம் மடங்கு மணல் உள்ளிட்ட கனிமவளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதைத் தடுக்கக் கோரியும் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள காமராஜர் சிலை முன்புமே 28-ம் தேதி காலை 11 மணிக்குஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகிப்பார். இதில் ஒன்றிய, நகர, பேரூர் கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொள்வர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x