Published : 21 Jul 2014 08:15 AM
Last Updated : 21 Jul 2014 08:15 AM

உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்: முதல்வர் உத்தரவு

மணல் கடத்தலை தடுக்க முயன்றபோது உயிரிழந்த தலைமைக் காவலர் கனகராஜ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தக்கோலம் ஆற்றில் மணல் கடத்தலை தடுக்கச் சென்ற கனகராஜ், டிராக்டர் ஓட்டுநர் சுரேஷால் டிராக்டரில் இருந்து கீழே தள்ளப்பட்டு, டிராக்டரில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

தலைமைக் காவலர் கனகராஜின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது மனைவிக்கும், குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் கனகராஜின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x