Published : 06 May 2023 06:18 AM
Last Updated : 06 May 2023 06:18 AM

அஞ்சல் துறை நடத்தும் சிறுவர்களுக்கான அஞ்சல்தலை சேகரிப்பு பயிற்சி முகாம்

சென்னை: அஞ்சல்தலை சேகரிப்பு குறித்து சிறுவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்குப் பயனுள்ள பொழுதுபோக்கை அளிக்கும் வகையில் கோடைக்கால அஞ்சல்தலை சேகரிப்பு முகாமை அஞ்சல் துறை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான கோடைக்கால முகாம் வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதிவரை, 18-ம் தேதிமுதல் 20-ம் தேதிவரை, 25-ம்தேதிமுதல், 27-ம் தேதிவரை என 3 பிரிவுகளாக அண்ணாசாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் நடத்தப்படுகிறது. பயிற்சி முகாம் தினமும் காலை 10:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் 25 பேர் அனுமதிக்கப்படுவர்.

இதில், பங்கேற்க விருப்பமுள்ள 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும்சிறுவர்கள் முன்பணமாக ரூ.250 செலுத்த வேண்டும். இந்த முகாமில் பங்கேற்கும் சிறுவர்களுக்கு அஞ்சல்தலை சேகரிப்பு, கடிதம் எழுதுதல்,தகவல் தொடர்பு பயிற்சி ஆகியவை கற்றுத் தரப்படும். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு 044-28543199 என்ற தொலைபேசி எண்ணிலும், 9444933467, 9840595839, 9952965458 ஆகிய மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அண்ணசாலை தலைமை அஞ்சல் நிலையதலைமை அஞ்சல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x