Published : 02 May 2023 05:25 AM
Last Updated : 02 May 2023 05:25 AM

கட்சி அலுவலகங்களில் மே தின கொண்டாட்டம்

தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரைவயின் கொடியை ஏற்றி வைத்து, தொழிலாளர்களுக்கு சீருடை, இனிப்புகளை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.

சென்னை: மே தினத்தை முன்னிட்டு சென்னையில் அரசியல் கட்சித் தலைமை அலுவலகங்களில் கட்சி மற்றும் தொழிற்சங்க கொடியேற்றி மே தினம் உற்சாகமாக கொண் டாடப்பட்டது.

சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அலுவலகத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கொடியேற்றினார். இந்நிகழ்வில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் வெ.ராஜசேகரன், ஆர்.பத்ரி, இரா.சிந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சியின்தமிழ்நாடு மாநிலக் குழு அலுவலகத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா கட்சிக் கொடியேற்றினார். இந்நிகழ்வில், கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் கொடியேற்றினார். பின்னர் தொழிலாளர்களுக்கு சீருடை, இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மே தினத்தையொட்டி, சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
ஜி.ராமகிருஷ்ணன் கொடியெற்றினார்.

மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மற்றும் நம்மவர் தொழிற்சங்க பேரவை சார்பில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சி துணைத் தலைவர் ஆர்.தங்கவேலு தலைமையில், துணைத் தலைவர் ஏ.ஜி.மவுரியா, நம்மவர் தொழிற்சங்க பேரவைத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலையில் தொழிற்சங்க பேரவை கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில்அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினநினைவுச் சின்னத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்திலும் மே தினம் கொண்டாடப்பட்டது.

மே தின நூற்றாண்டு நிறைவு விழா: இந்தியாவில் முதன்முறையாக 1923-ம்ஆண்டு மெரினா கடற்கரையில் மே தினத்தை சிங்காரவேலர் கொண்டாடினார். இந்நிகழ்வின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மே தின கொண்டாட்டம் மெரினா உழைப்பாளர் சிலை அருகே நேற்று நடைபெற்றது.

சிஐடியு மத்திய சென்னை மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாவட்டத் தலைவர் எம்.தயாளன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் அம்பத்தூரில் நடைபெற்ற மே தின கொண்டாட்டத்தில் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x