Published : 01 May 2023 06:08 AM
Last Updated : 01 May 2023 06:08 AM
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற குருப்-1 முதல்நிலைத் தேர்வு, டிசம்பரில் நடைபெற்ற சட்டப்பேரவை நிருபர் தேர்வு, மீன்துறை ஆய்வாளர் தேர்வு, கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற சுகாதார அலுவலர் தேர்வு ஆகிய 4 போட்டித் தேர்வுகளின் முடிவுகளையும், கடந்த வெள்ளிக்கிழமை இரவு டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
அடுத்தகட்டத் தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியலை, தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in)தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வுகால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தேர்வு முடிவைகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் வெளியிட வேண்டும். குறிப்பாக, கணினி வழியில்நடத்தப்படும் தேர்வுகளின் முடிவுகளை ஒரே மாதத்தில் வெளியிட வேண்டுமென தேர்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT