Published : 01 May 2023 06:23 AM
Last Updated : 01 May 2023 06:23 AM

சென்னை - கோவை விரைவு ரயில் தாமதமாக புறப்படும்

சென்னை: பேசின்பாலம் சந்திப்பு - வியாசர்பாடி இடையே பொறியியல் பணி காரணமாக, விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூருக்கு மே 3-ம் தேதி காலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை விரைவு ரயில் (12675) நேரம் மாற்றப்பட்டு, அரைமணி நேரம் தாமதமாக காலை 6.40 மணிக்கு புறப்படும்.

சென்னை சென்ட்ரல்-திருப்பதிக்கு மே 3-ம் தேதி காலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில்(16057) நேரம் மாற்றப்பட்டு, அரைமணி நேரம் தாமதமாக காலை 6.55 மணிக்கு புறப்படும்.

பெரம்பூரில் நிறுத்தப்படும்: ஈரோடு - சென்னை சென்ட்ரலுக்கு மே 2-ம் தேதி இரவு 9மணிக்கு இயக்கப்படும் ஏற்காடுவிரைவு ரயில் (22650), பெரம்பூர்- சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்பட உள்ளது.இந்த ரயில் பெரம்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x