Published : 29 Apr 2023 11:03 AM
Last Updated : 29 Apr 2023 11:03 AM

பாவேந்தர் காண விரும்பிய தமிழகமாக இன்று எழுந்துநிற்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்திய அமைச்சர்கள்

சென்னை: "பாவேந்தர் காண விரும்பிய தமிழகமாக இன்று எழுந்துநிற்கிறோம்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பாவேந்தர் பாரதிதாசனின் 133ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்! எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லையென்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்! தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்!" எனத் தமிழ் வளரவும் தமிழர் உயரவும் உணர்ச்சியூட்டி முற்போக்காய்ப் பாப்புனைந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாள்! துறைதோறும் தமிழ் வளர்ச்சி, பெண்கல்விக்கான திட்டங்கள், பல மொழிபெயர்ப்புத் திட்டங்கள் எனப் பாவேந்தர் காண விரும்பிய தமிழ்நாடாக இன்று எழுந்துநிற்கிறோம்!" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழக அரசு சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் சாமிநாதன், சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x