Published : 28 Apr 2023 07:10 AM
Last Updated : 28 Apr 2023 07:10 AM
சென்னை: சென்னை ஐஐடியில் கட்டிடக்கலை, டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த நவீன ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகம் அமைப்பதற்காக அங்கு படித்த முன்னாள் மாணவர் பிரதாப்சுப்பிரமணியம் ரூ.6.76 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இதன் திறப்புவிழா கிண்டியில் உள்ள வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆய்வகத்தை மத்தியமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘பிரதமரின் டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் முன்னெடுப்பால் தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் உலகில் இந்தியா முன்னணிநாடாக திகழ்கிறது’’ என்றார்.
இந்நிகழ்வில் சென்னை ஐஐடிஇயக்குநர் வி.காமகோடி, ஐஐடி முன்னாள் மாணவர் பிரதாப் சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் காமகோடி கூறியதாவது: இந்த ஆய்வகத்தில் தற்போதைய தொழில்நுட்ப தேவைகளுக்கான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக செல்போனுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்க இந்த மையம் உதவியாக இருக்கும்.
ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை சம்பவத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒய்வுபெற்ற ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக்குழு வழங்கும் அறிக்கை மூலம்அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT