Published : 27 Apr 2023 06:05 AM
Last Updated : 27 Apr 2023 06:05 AM
சென்னை: தமிழகத்தின் பெருமையைக் கொண்டாடும் சுவையான பயணமான ‘காட்பரி இனிய கொண்டாட்டம்’ என்ற சமீபத்திய பிரச்சாரத்தில் `இந்து தமிழ் திசை'யுடன் காட்பரி டெய்ரி மில்க் இணைந்துள்ளது.
விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் சமையல் ஆகிய துறைகளில் 5 தமிழக பிரபலங்களை இது அறிமுகப்படுத்தியது மற்றும் அவர்களுக்கு காட்பரி டெய்ரி மில்க் உட்செலுத்தப்பட்ட இனிப்புகளை வழங்கி கவுரவித்துள்ளது. அவை சென்னையில் உள்ள மிகப்பெரிய இனிப்பு மற்றும் கஃபே சங்கிலித்தொடர் கடைகளில் கிடைக்கின்றன.
மொத்தம் 45 நாட்கள் நீடிக்கும்இந்த பிரச்சாரம் 5 வீடியோக்களைக் கொண்ட யூடியூப் குறுந்தொடருடன் தொடங்குகிறது. இதில் பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றிய இனிமையான நினைவுகள், அவர்கள் அடைந்த மைல்கற்கள், நட்சத்திரமாக உருவாவதை நோக்கிய பயணம் ஆகியவை குறித்து வேடிக்கையான மற்றும் இனிமையான உரையாடல் மூலம் விவரித்துள்ளனர்.
பிரபலங்கள் பங்கேற்பு: கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ராப் பாடகர் மற்றும் பாடலாசிரியர் அறிவு, நடிகை ப்ரியாபவானி சங்கர், பாடகி மற்றும் தொலைக்காட்சி ஆளுமை சிவாங்கி கிருஷ்ணகுமார் மற்றும்சமையல் கலைஞர் தாமு ஆகியோர் அந்த பிரபலங்களாவர். இவர்கள் தமிழ்நாட்டில் பிரபலமாக அறியப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், மக்களுடன் தொடர்ந்து இணைப்பில் உள்ளவர்கள்.
பிரபலமான சமையல்கலைஞரும் உணவு வரலாற்றாசிரியருமான ராகேஷ் ரகுநாதன் தொகுத்து வழங்கிய இந்த யூடியூப் நிகழ்ச்சியில், பிரபலங்கள் உணவுடன் தொடர்புடைய தங்களின் இனிமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றியகண்ணோட்டத்தையும் பகிர்ந்துகொண்டுள்ளனர். மேலும் செஃப் ராகேஷ் அப்பிரபலங்களின் இனியநினைவுகளை போற்றும் வகையில், காட்பரி டெய்ரி மில்க் மூலம்அவர்களுக்கு பிடித்த பாரம்பரிய இனிப்புகளை தயார் செய்துள்ளார்.
பாரம்பரியமான சில பிரபல உணவு வகைகள் காட்பரி டெய்ரிமில்க் உட்செலுத்தப்பட்ட புதுமையான உணவுகளாக தயாரிக்கப்பட்டன. அந்த வகையில் தினேஷ் கார்த்திக்கின் சாக்லேட் பால் அல்வா, அறிவின் சாக்லேட் கமர்கட்டு, ப்ரியா பவானி சங்கரின் சாக்லேட் பருப்பு பாயாசம், சிவாங்கியின் சாக்கோ நட் மிட்டாய், செஃப் தாமுவின் சாக்லேட் பொங்கல் ஆகியவை தயாரிக்கப்பட்டன. இந்த தனித்துவமான இனிப்பு வகைகள் சென்னையில் உள்ள கங்கா இனிப்புகள், ஹாட் பிரெட்ஸ்மற்றும் சங்கீதா சைவ உணவகங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் மே மாத இறுதி வரை விற்பனைக்குக் கிடைக்கும்.
காட்பரி டெய்ரி மில்க்கை பிராந்திய இனிப்பு வகைகளுடன் கலப்பதன் மூலம், சென்னை மக்களுக்கு உண்மையிலேயே தனித்துவமான மற்றும் சுவையான இனிப்பு அனுபவத்தை இந்த பிராண்ட் உரு வாக்கியுள்ளது.
காட்பரி இனிய கொண்டாட்டம் நிகழ்ச்சியில் மொண்டலெஸ் இந்தியா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவு துணைத் தலைவர் நிதின் சைனி, `தி இந்து' குழும தலைமை வருவாய் அதிகாரிசுரேஷ் பாலகிருஷ்ணா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
மேலும் 2 வீடியோக்கள் விரைவில் வெளியாகும். இந்த தனித்துவமான, சுவையான மற்றும் சுலபமாக சமைக்கக்கூடிய இனிப்புகளைப் பார்த்து தெரிந்துகொள்ள கீழே உள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT