Published : 26 Apr 2023 06:36 PM
Last Updated : 26 Apr 2023 06:36 PM

சென்னை தி.நகரில் ‘இந்தியாவின் நீளமான ஆகாய நடைபாதை’ - மே மாதம் திறப்பு

சென்னை - தி.நகர் ஆகாய நடைபாதை

சென்னை: சென்னை - தி.நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடைபாதை, ‘இந்தியாவின் நீளமான ஆகாய நடைபாதை’யில் ஒன்றாக இருக்கும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையின் மிகப் பெரிய வர்த்தகப் பகுதியாக தி.நகர் உள்ளது. இங்கு, நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்வதால் நெரிசல் மிக அதிகமாக காணப்படுகிறது. இந்த நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் மூன்று ஆண்டுகளுக்குமுன் 30 கோடி ரூபாய் செலவில் ஆகாய நடைபாதை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. கரோனா காரணமாக, 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.

அதன்பின், பணிகள் துவங்கப்பட்டு, தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக, மாம்பலம் ரயில் நிலையம் வரை, 1,968 அடி நீளத்திலும், 13 அடி அகலத்தில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் மே மாதம் முதல் வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்த, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "தி.நகர் நடைமேம்பாலம் பணிகள் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க தயார் நிலையில் உள்ளது. இந்தியாவில் மிக நீளத்தில் அமைக்கப்பட்ட நடைமேம்பாலம் இதுதான். பொதுமக்களை கவரும் வகையில், வண்ண ஓவியங்கள் வரைப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சக்கர நாற்காலி வசதி, மின்துாக்கி வசதி உள்ளிட்டவை உள்ளன. பாலம் திறக்கப்பட்டப்பின், சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்யாத அளவுக்கு தினசரி கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும்" என்று அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x