Published : 23 Apr 2023 12:23 PM
Last Updated : 23 Apr 2023 12:23 PM

12-ம் வகுப்பு தேர்வு | சென்னை மண்டல சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கிடுக: சு.வெங்கடேசன் எம்.பி 

சென்னை: "பல பாடத் திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஒற்றைத் தேர்வு என்று "நீட்"டைத் திணிக்கும் ஒன்றிய அரசே, ஒரே பாடத் திட்டத்திற்கு பல கேள்வித்தாள் என்பது நகை முரண் அல்லவா. பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ்நாட்டு மாணவர்களுக்கு முழுமையான நீதி வழங்கு" என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு இயற்பியல் மற்றும் உயிரியல் கேள்வித்தாள்கள் மிகமிக கடுமை. மும்பை, டெல்லி உள்ளிட்ட பிற நான்கு மண்டல கேள்வித்தாள்கள் மிக எளிமை.ஆகவே சென்னை மண்டல மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் எனக்கேட்டு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு சிபிஎஸ்இ தேர்வு ஆணையர் பதில் அளித்துள்ளார்.

இந்த பிரச்சினையைத் தீர்க்க பாட நிபுணர்களின் கருத்துக்களையும் உள்ளடக்கி முடிவெடுக்க கூடிய உள்கட்டமைப்பு இருப்பதாக கூறியுள்ளார். எங்கள் மாணவர்களுக்கு நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த மீண்டும் கடிதம் எழுதியுள்ளேன்.

— Su Venkatesan MP (@SuVe4Madurai) April 23, 2023

பல பாடத் திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஒற்றைத் தேர்வு என்று "நீட்"டைத் திணிக்கும் ஒன்றிய அரசே, ஒரே பாடத் திட்டத்திற்கு பல கேள்வித்தாள் என்பது நகை முரண் அல்லவா. கொள்கை குழப்படி அல்லவா? பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ்நாட்டு மாணவர்களுக்கு முழுமையான நீதி வழங்கு" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x