Published : 19 Apr 2023 06:12 AM
Last Updated : 19 Apr 2023 06:12 AM
விருதுநகர்: விருதுநகர் பகுதியில் செல்லும் நான்கு வழிச்சாலையை பொது மக்கள் ஆபத்தை உணராமல் அலட்சியமாகக் கடப்பதால், தொடர்ந்து விபத்துகள் ஏற் படுகின்றன. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூகநல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விருதுநகர் பகுதியில் உள்ள மதுரை-கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையில் அடிக்கடி விபத் துகள் ஏற்பட்டு வருகின்றன. சத்திரரெட்டியபட்டி விலக்கு, அரசு சுற்றுலா மாளிகை சந்திப்பு, அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை, புல்லலக்கோட்டை சந்திப்பு, கணபதி மில் சந்திப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பு, சூலக்கரைமேடு, பட்டம்புதூர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன.
இதில் சாலையை நடந்து கடக்கும் பொதுமக்கள், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அதிகளவில் விபத்துக்குள்ளா கின்றனர். விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விருதுநகர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு பொதுமக்கள் சாலையைக் கடப்பதைத் தடுக்கும் வகையில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக் கப்பட்டுள்ளன.
ஆனாலும், அதன்வழியாக குனிந்து சாலையைக் கடந்து செல்கின்றனர். இதேபோன்று, புல்லலக்கோட்டை சந்திப்பு பகுதியில் சாலையைக் கடக்கும்போதும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலையைக் கடக்கும் போதும் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன.
அதிகாரிகள் குழு ஆய்வு: விருதுநகரிலிருந்து மீசலூர், அழகாபுரி செல்லும் பேருந்துகள், வாகனங்கள், மாவட்ட ஆயுதப்படைக்குச் செல்லும் காவல்துறை வாகனங்கள், இரு சக்கர வாகனங் கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நான்குவழிச் சாலையை பாதுகாப்பில்லாத முறையிலேயே கடக்கின்றன.
இதனால், இப்பகுதிகளில் தொடர் விபத்துகள் ஏற்படுவதால், விபத்துகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூகநல ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே, மதுரை- கோவில்பட்டி இடையேயான நான்கு வழிச் சாலையில் அதிக விபத்துகள் ஏற்படும் இடங்களில் விபத்து களைத் தடுக்க நடவடிக்கை எடுப் பது குறித்து, சென்னை, மதுரையிலிருந்து வந்திருந்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதி காரிகள் குழு நேற்று ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT