Published : 17 Apr 2023 02:24 PM
Last Updated : 17 Apr 2023 02:24 PM

தமிழகத்தில் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் இதுவரை 260 கோடி பயணங்கள்

இலவச பேருந்து | கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் இதுவரை 260.59 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி பதவியேற்ற உடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில், 'நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்' என்ற திட்டமும் இடம்பெற்று இருந்தது. இந்தத் திட்டம், மே 8-ம் தேதி முதலே நடைமுறைக்கு வந்தது. இதில் நகர்ப்புறங்களில் வெள்ளை போர்டு கொண்ட பேருந்துகளிலுரும், கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணமில்லா பயணம் திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 30-ம் தேதி வரை 260.59 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x