Published : 16 Apr 2023 01:23 PM
Last Updated : 16 Apr 2023 01:23 PM

ஆளுநர் விவகாரம் | டெல்லி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் நன்றி

அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியதைபோல் டெல்லி சட்டப்பேரவையில் துணை நிலை ஆளுநருக்கு எதிராக விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கடிதம் எழுதிய டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்வதைக் கண்டித்தும், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி கடந்த 10-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றினார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பப்ட இந்த தீர்மானத்தைபோல், மற்ற மாநிலங்களிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றியதைப்போல் டெல்லி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநருக்கு எதிராக விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதி இருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாடு சட்டப்பேரவையின் தீர்மானத்தைப் பாராட்டி, எங்கள் முயற்சியில் தாங்களும் இணைந்துகொண்டதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு நன்றி. ஆம், எந்தவொரு ஜனநாயகத்திலும் சட்டப்பேரவையின் இறையாண்மைதான் உச்சமானது. நியமனப் பதவியில் இருக்கும் ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் சட்டமியற்றும் அதிகாரத்தையும் பொறுப்புகளையும் சிறுமைப்படுத்தக் கூடாது. தீ பரவட்டும்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x